விருஷகர்மா படத்திற்காக உருவான குகை செட்: பத்திரிகையாளர்களை வியப்பில் ஆழ்த்திய நாக சைதன்யா!
நடிகர் நாக சைதன்யா தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பான விருஷகர்மா திரைப்படத்திற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட குகை செட்டிற்கு பத்திரிகையாளர்களை நேரில் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியுள்ளார். முற்றிலும் புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு பத்திரிகையாளர்கள் அளித்த ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். விருபாக்ஷா புகழ் இயக்குனர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் உருவாகும் இந்த மர்மங்கள் நிறைந்த திரில்லர் படத்தில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்காக கலை இயக்குனர் ஸ்ரீநாகேந்திரா தலைமையில் பல மாத உழைப்பில் உருவாக்கப்பட்ட அந்த பழமையான குகை செட், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் கலை வேலைப்பாடுகளுடன் கூடியிருக்கிறது. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வரும் டிசம்பர் 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் விருஷகர்மா வெளியாகவுள்ளது. தெலுங்கு சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக பத்திரிகையாளர்களை நேரடி படப்பிடிப்பு குகை உலகிற்கு அழைத்துச் சென்று படக்குழு நடத்திய இந்த அறிமுக வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
· Ursvamsishekar