நாக சைதன்யாவின் மாஸ் அவதாரம்: 'வ்ருஷகர்மா' படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியானது!
நாக சைதன்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் தயாராகி வரும் 'வ்ருஷகர்மா' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஸ்வாக் ஆஃப் அர்ஜுன்' பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நாக சைதன்யா மிகுந்த ஸ்டைலான தோற்றத்திலும் அதிரடியான நடன அசைவுகளுடனும் புதிய மாஸ் அவதாரத்தில் தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார். இப்பாடலின் முழு லிரிக்கல் வீடியோ வரும் நவம்பர் 7 அன்று வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் தண்டு இயக்கிய முந்தைய படமான 'விருபாக்ஷா' மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதால், அவரது இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தின் கதைக்களம் மீது ரசிகர்களுக்கு தொடக்கம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த பாடல் ப்ரோமோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
· Ursvamsishekar