நாக சைதன்யாவின் விருஷகர்மா: ஸ்வாக் ஆஃப் அர்ஜுன் முதல் பாடல் நவம்பர் 7 ரிலீஸ்
யுவ சாம்ராட் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் அதிரடிப் படமான 'விருஷகர்மா' (Vrushakarma) படத்தின் முதல் பாடலான 'ஸ்வாக் ஆஃப் அர்ஜுன்' (Swag Of Arjun) வரும் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் தண்டு இப்படத்தை இயக்கி வருகிறார். காந்தாரா புகழ் பி. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநவ கவி வரிகளில், விஜய் பின்னி நடன அமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல் நாக சைதன்யாவின் ஸ்டைலான மாஸ் நடனத்துடன் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. துடிப்பான இசையுடன் பாடல் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இன்னும் 30 நாட்களில் அதாவது வரும் டிசம்பர் 4ஆம் தேதி 'விருஷகர்மா' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்த முதல் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
· Ursvamsishekar