நாகார்ஜுனாவின் கிங் 100 படத்தில் தபு: பிறந்தநாள் சிறப்பு கிளிம்ப்ஸ் வெளியீடு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படத்தில் (King100), பிரபல நடிகை தபு நடிக்கும் கதாபாத்திரத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'ஐ ஹேட் லக்' (I Hate Luck) என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (டிஎஸ்பி) இசையமைக்கிறார். 90களின் பல வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா மற்றும் தபு கூட்டணி, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாகார்ஜுனாவின் இந்த 100வது பிரம்மாண்ட திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
· Ursvamsishekar