நாகார்ஜுனா வழங்கும் இட்லு அர்ஜுனா: நவம்பர் 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

நாகார்ஜுனா வழங்கும் இட்லு அர்ஜுனா: நவம்பர் 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ்!

டோலிவுட்டின் முன்னணி நாயகன் கிங் நாகார்ஜுனா வழங்கும் 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அனிஷ் மற்றும் பிரபல நாயகி அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட் குடுமுலா மேற்பார்வையில் மகேஷ் உப்பலா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் துள்ளலான இசையமைத்துள்ளார். இளமை ததும்பும் காதல் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. காதலும் குடும்ப உணர்வுகளும் கலந்த கலகலப்பான கதைக்களமாக இப்படம் உருவாகியுள்ளது என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நவம்பர் 13 திரையரங்கு வெளியீட்டை முன்னிட்டு அடுத்தடுத்து பாடல்கள் மற்றும் டீசர் விளம்பரங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்