தென்னிந்திய சினிமாவின் போக்கை மாற்றிய 'சிவா': 37 ஆண்டுகளை நிறைவு செய்த கல்ட் கிளாசிக் திரைப்படம்!

தென்னிந்திய சினிமாவின் போக்கை மாற்றிய 'சிவா': 37 ஆண்டுகளை நிறைவு செய்த கல்ட் கிளாசிக் திரைப்படம்!

தென்னிந்திய திரையுலகில் ஆக்‌ஷன் திரைப்படங்களின் மேக்கிங் மற்றும் ஒலி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கல்ட் கிளாசிக் படமான 'சிவா' வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அக்கினேனி நாகார்ஜுனா, அமலா மற்றும் ரகுவரன் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் சினிமா வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. ராம் கோபால் வர்மா இயக்குநராக அறிமுகமான இந்த திரைப்படம், அதுவரை இருந்த வழக்கமான தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ஃபார்முலாக்களை உடைத்தெறிந்தது. கல்லூரிக் களம், வன்முறை கலந்த மாணவர் அரசியல், இயல்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் புதுமையான சவுண்ட் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொன்றிலும் திரையரங்குகளை அதிர வைத்தது. குறிப்பாக நாகார்ஜுனா சைக்கிள் செயினை கழற்றி சண்டையிடும் காட்சி இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத கொண்டாட்டமாக நினைவுகூரப்படுகிறது. வெளியாகி 37 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் பல இளம் படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் பாடப்புத்தகமாக விளங்கும் 'சிவா' படத்தின் இந்த ஆண்டு நிறைவை சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்