பிரம்மாண்ட 'ராமாயணா' முதல் பாகம்: நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் பிரீமியம் திரைகளில் ரிலீஸ்!

பிரம்மாண்ட 'ராமாயணா' முதல் பாகம்: நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் பிரீமியம் திரைகளில் ரிலீஸ்!

பிரபல தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரீமியம் வடிவங்களில் வெளியாக இருப்பதாக எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இதிகாசப் பெருங்காவியத்தை நவீன காலத்திற்கு ஏற்ற பிரம்மாண்டமான விஷுவல் காட்சிகளுடன் வெள்ளித்திரையில் படைக்கும் பெருமுயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது. ஐமேக்ஸ் உள்ளிட்ட அனைத்து உயர்தர திரையரங்குகளிலும் திரையிடப்பட உள்ள இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வரும் தசரா பண்டிகை தினத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படம், பல மொழிகளில் உலகளாவிய ரசிகர்களைச் சென்றடைய உள்ளது. நீண்ட நாட்களாக இந்த வரலாற்றுப் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருந்த சினிமா ரசிகர்களுக்கு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பெரும் கொண்டாட்டத்தை அளித்துள்ளது. அடுத்தடுத்து படத்தின் டீசர், கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்கள் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்