லாஸ் ஏஞ்சல்ஸில் நமித் மல்ஹோத்ராவின் 'ராமாயணா' பிரம்மாண்ட நிகழ்வு: ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு!

லாஸ் ஏஞ்சல்ஸில் நமித் மல்ஹோத்ராவின் 'ராமாயணா' பிரம்மாண்ட நிகழ்வு: ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு!

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் பிரத்யேக அறிமுக நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று இரவு நடைபெறுகிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னணி ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு அரங்கேற உள்ளதாக எக்ஸ் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இதிகாசக் கதையான ராமாயணத்தை சர்வதேச பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்படம் பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' என்ற தலைப்பில் நடக்கும் இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் சந்திப்பில் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் படைப்பாக்க விவரங்கள் விவரிக்கப்படவுள்ளன. ஹாலிவுட்டின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். விரைவில் படத்தின் முதல் பார்வை மற்றும் நடிகர் பட்டாளம் குறித்த விரிவான விபரங்கள் முறைப்படி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Only Kollywood

பழைய செய்திகள்