ஜியோஹாட்ஸ்டாரில் வெளியான நமித் மல்ஹோத்ராவின் 'ராமாயணா' பிரத்யேக காட்சி: இணையத்தில் வைரல்!
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் நமித் மல்ஹோத்ராவின் 'ராமாயணா' திரைப்படத்தின் பிரத்யேக அறிமுக காட்சி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் டெலிவிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்த இதிகாசப் படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கின்றனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ் நிபுணர்கள் இணைந்து உருவாக்கும் இந்த காட்சி வடிவம் சினிமா ரசிகர்களிடையே பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
· Vijaytelevision