50 நாட்களில் பாலகிருஷ்ணாவின் 'டாடா': டிசம்பர் 23 வெளிநாட்டு பிரீமியர் காட்சிகள் உறுதி!

50 நாட்களில் பாலகிருஷ்ணாவின் 'டாடா': டிசம்பர் 23 வெளிநாட்டு பிரீமியர் காட்சிகள் உறுதி!

தெலுங்கு திரையுலகின் நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமான 'டாடா' படத்தின் வெளியீட்டுக்கான 50 நாள் கவுண்டவுன் தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்தின் வெளிநாட்டு பிரீமியர் காட்சிகள் வரும் டிசம்பர் 23 அன்று நடைபெற இருப்பதாக பிரபல செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் அறிவித்துள்ளார். பாலகிருஷ்ணாவின் கம்பீரமான ஆக்‌ஷன் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு தமனின் அதிரடி இசை மற்றும் அனல் பறக்கும் வசனங்கள் கூடுதல் பலம் சேர்க்கின்றன. பிரத்யங்கிரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தின் வெளிநாட்டு திரையரங்கு உரிமைகளைப் பெற்று மிக பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. தெலுங்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பாலகிருஷ்ணா படங்களுக்குத் தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் குறிவைத்து களமிறங்கும் 'டாடா' வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்