சசிகுமாரின் 22வது படத்தில் நந்திதா ஸ்வேதா: 50வது படத்தை நெருங்கும் நடிகைக்குப் புதிய வாய்ப்பு!
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா பிஆர்ஓ கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அயோத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனின் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் சசிகுமார் மூன்றாவது முறையாக இணையும் தயாரிப்பு எண் 22 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை வென்ற நந்திதா ஸ்வேதா, தற்போது தனது திரைப்பயணத்தில் 50 படங்களை நெருங்கும் முக்கியத் தருணத்தில் உள்ளார். சசிகுமாருடன் அவர் முதல்முறையாக இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தில், கதைக்கு வலு சேர்க்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் அவர் வலம் வரவிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹரி சந்தோஷ் இயக்கும் இப்படத்தில் நரேன், சுவாசிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். எமோஷனல் ஆக்ஷன் களத்தில் உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj