‘ருகு ருகு ருக்மணி’ பாடலுக்கு இணைந்து நடனமாடிய நானி மற்றும் நிதின்: இணையத்தில் வைரலாகும் ஜாம் பார்ட்டி வீடியோ!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் நிதின் இருவரும் இணைந்து ‘ருகு ருகு ருக்மணி’ என்ற துள்ளலான பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர். ‘அலியாஸ் ருக்மணி’ (Alias Rukmini) படத்திற்கான ஜாம் பார்ட்டியில் அவர்கள் நடனமாடிய வீடியோ நாளை முழுமையாக வெளியாகவுள்ளதாக எக்ஸ் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு முன்னணி கதாநாயகர்களும் ஒரே மேடையில் நட்புடன் இணைந்து இந்த துள்ளல் பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளன. இந்த வீடியோவின் முன்னோட்டக் கிளிப் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி சினிமா பிரியர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அலியாஸ் ருக்மணி’ திரைப்படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாளை வெளியாகவுள்ள முழு ஜாம் பார்ட்டி வீடியோவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar