நானி வழங்கும் நிதின் படம் அலியாஸ் ருக்மிணி: டிசம்பர் 4 திரையரங்குகளில் ரிலீஸ்
நேச்சுரல் ஸ்டார் நானி வழங்க, நடிகர் நிதின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படமான 'அலியாஸ் ருக்மிணி' (Alias Rukmini) வரும் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் முரளி இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். கிருஷ்ணன் மற்றும் ருக்மிணி ஆகிய இரு கதாபாத்திரங்களின் காதலையும், அவர்கள் வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களையும் சுவாரசியமாகவும் நகைச்சுவை ததும்பவும் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. நடிகர் நானி தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் இப்படத்தை பெருமையுடன் வழங்குவது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 30 நாட்களில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் சிறந்த காதல் திரைப்படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar