நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் 'தி பாரடைஸ்': ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான நானி நடிப்பில் தயாராகும் புதிய பிரம்மாண்ட திரைப்படம் 'தி பாரடைஸ்'. 'தசரா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் நானி மீண்டும் இணைந்துள்ள இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படம் 2026 செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தில் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி மற்றும் சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 'ஜடால்' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நானி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்ற உள்ளார். படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போஸ்டர் வெளியாகி சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நானி மற்றும் அனிருத் கூட்டணியின் இசையும், ஸ்ரீகாந்தின் அதிரடி இயக்கமும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
· Prosathish