ரசிகர்களுக்கு நன்றி கூறி உற்சாகமூட்டிய நானியின் 'தி பாரடைஸ்' படக்குழு: உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இரவு பகலாக தீவிரமாக உழைத்த படக்குழுவினர், இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்து ரசிகர்களின் பார்வைக்கு படத்தை சமர்ப்பித்துள்ளதாக எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 'தசரா' திரைப்படத்தின் பிளாக்பாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான ஆவல் ரசிகர்கள் மத்தியில் வானளவு உயர்ந்துள்ளது. அனிருத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஏற்கனவே சமூக வலைதளங்களில் அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளன. மோகன் பாபு, ராகவ் ஜூயல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் சிறப்பு பிரிமியர் காட்சிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நானியை ஒரு அதிரடி ஆக்ஷன் அவதாரத்தில் திரையில் காண ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.
· Prosathish