3 நாட்களில் ரூ.136 கோடி வசூல் வேட்டை: பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பும் நானியின் 'தி பாரடைஸ்'!
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் வெளியாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் உலகம் முழுவதும் முதல் 3 நாட்களில் 136 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் மற்றும் தயாரிப்பு குழு எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தசரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா உடன் நானி மீண்டும் இணைந்துள்ள இந்த ஆக்ஷன் படத்தில், மோகன் பாபு மற்றும் ராகவ் ஜூயல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் அதிரடி இசையும், தீவிரமான திரைக்கதையும் திரையரங்குகளில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால், வரவிருக்கும் வார இறுதி நாட்களிலும் இந்த வசூல் வேட்டை மேலும் அதிகரிக்கும் என்று விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
· Prosathish