4 நாட்களில் ரூ.155 கோடி வசூலித்து மாபெரும் சாதனை: பாக்ஸ் ஆபிசில் நானியின் 'தி பாரடைஸ்' மிரட்டல்!

4 நாட்களில் ரூ.155 கோடி வசூலித்து மாபெரும் சாதனை: பாக்ஸ் ஆபிசில் நானியின் 'தி பாரடைஸ்' மிரட்டல்!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படம் தனது முதல் நான்கு நாட்களில் உலகளவில் 155 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான இந்த திரைப்படம், முதல் வார இறுதியில் அனைத்து மொழிகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியுள்ளது. நானியின் அதிரடி நடிப்பு மற்றும் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களைத் தியேட்டருக்குப் படையெடுக்க வைத்துள்ளது. நானியின் திரைப்பயணத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்த படமாக 'தி பாரடைஸ்' உருவாகியுள்ளதால் ஒட்டுமொத்த படக்குழுவினரும், ரசிகர்களும் பெரும் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர்.

· Prosathish

பழைய செய்திகள்