2 நாட்களில் 114 கோடி ரூபாய் வசூல்: பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் நானியின் 'தி பாரடைஸ்'!

2 நாட்களில் 114 கோடி ரூபாய் வசூல்: பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் நானியின் 'தி பாரடைஸ்'!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் உலகம் முழுவதும் முதல் 2 நாட்களில் 114 கோடி ரூபாய்க்கும் அதிகமான மொத்த வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது என்று சினிமா பி.ஆர்.ஓ சதீஷ் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் இப்படம் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. நானியின் முரட்டுத்தனமான நடிப்பு, ஸ்ரீகாந்த் ஒடேலாவின் அனல் பறக்கும் இயக்கம் மற்றும் அனிருத்தின் அதிரடி பின்னணி இசை ஆகியவை ரசிகர்களைத் திரையரங்குகளுக்குப் படையெடுக்க வைத்துள்ளன. மோகன் பாபு, ராகவ் ஜூயல் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் வார இறுதி நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'தி பாரடைஸ்', நானியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான வசூல் சாதனையாக அமையவுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

· Prosathish

பழைய செய்திகள்