தியேட்டர்களில் வெடிக்கத் தயாராகும் தி பாரடைஸ்: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய திங்க் ஸ்டுடியோஸ்
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தி பாரடைஸ் திரைப்படம் திரைக்கு வர இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படக்குழு அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் போஸ்டரை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான திங்க் ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி முன்னோட்ட வீடியோக்கள் மற்றும் மெலடி பாடல்கள் ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடமும் இணையத்திலும் அமோக வரவேற்பைப் பெற்று ட்ரெண்டாகி வருகின்றன. முரட்டுத்தனமான ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான குடும்பக் காட்சிகள் நிறைந்த இந்த பிரம்மாண்ட படைப்பிற்கான டிக்கெட் முன்பதிவுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தமிழக தியேட்டர்களிலும் அதிகமான திரைகளில் படத்தை வெளியிட தீவிர ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
· Prosathish