40 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் நானியின் தி பாரடைஸ்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான இயற்கை நாயகன் நானி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் டிக்கெட் விற்பனையில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இப்படம் இரண்டாவது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதாக பிரபல மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். முன்னணி ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களான புக்மைஷோ மற்றும் டிஸ்ட்ரிக்ட் ஆகியவற்றின் வழியாக மட்டுமே இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவாலும் நேர்மறையான விமர்சனங்களாலும் பல முக்கிய நகரங்களில் கூடுதல் காட்சிகள் திரையரங்குகளில் உடனடியாக ஒதுக்கப்பட்டு வருகின்றன. நானியின் இயல்பான நடிப்பு, சுவாரசியமான திரைக்கதை மற்றும் சிறந்த தொழில்நுட்பத் தரம் ஆகியவை அனைத்து தரப்பு குடும்ப ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு வரவழைத்து வருகின்றன. இதனால் வரும் நாட்களிலும் படத்தின் வசூல் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Ursvamsishekar