முதல் நாளில் ரூ. 88 கோடி வசூல்: தி பாரடைஸ் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனை!

முதல் நாளில் ரூ. 88 கோடி வசூல்: தி பாரடைஸ் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனை!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவான அதிரடி பிரம்மாண்ட திரைப்படமான 'தி பாரடைஸ்', திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே உலகளவில் 88 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளது. இந்த வரலாற்றுத் தொடக்கத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வ போஸ்டருடன் எக்ஸ் தளத்தில் கொண்டாட்டத்துடன் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி முற்றிலும் மாறுபட்ட முரட்டுத்தனமான அவதாரத்தில் மிரட்டியுள்ளார். ராக்ஸ்டார் அனிருத்தின் அனல் பறக்கும் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டர்களை அதிர வைத்துள்ளது. மோகன் பாபு, ராகவ் ஜூயல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்த ஆக்‌ஷன் படம், முதல் காட்சியிலிருந்தே பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்துள்ளது. முதல் நாளிலேயே 88 கோடியைத் தாண்டி உலகெங்கும் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படத்தின் வசூல் புதிய உச்சங்களைத் தொடும் என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் உற்சாகத்துடன் கணித்துள்ளனர்.

· Prosathish

பழைய செய்திகள்