திரையரங்குகளில் வெளியானது நானியின் 'தி பாரடைஸ்': அனிருத் இசையில் ஆக்ஷன் கொண்டாட்டம்

திரையரங்குகளில் வெளியானது நானியின் 'தி பாரடைஸ்': அனிருத் இசையில் ஆக்ஷன் கொண்டாட்டம்

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படமான 'தி பாரடைஸ்' இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 'தசரா' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி இம்முறையும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு அழுத்தமான ஆக்ஷன் கதையைக் களம் இறக்கியுள்ளது. திரையரங்குகளில் காலை முதலே ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் மேள தாளங்களுடனும் திருவிழா போலக் கொண்டாடி வரும் நிலையில், 'தி பாரடைஸ்' பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்கு டிக்கெட் முன்பதிவு இணைப்பையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

· Prosathish

பழைய செய்திகள்