ஜாடல் மற்றும் சுப்புவின் மாறுபட்ட காதல்: 8 நாட்களில் வெளியாகிறது தி பாரடைஸ்!

ஜாடல் மற்றும் சுப்புவின் மாறுபட்ட காதல்: 8 நாட்களில் வெளியாகிறது தி பாரடைஸ்!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடித்துள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வர இன்னும் 8 நாட்களே உள்ளன. இந்நிலையில் படத்தின் கதாநாயகன் ஜாடல் மற்றும் கதாநாயகி சுப்பு ஆகியோரின் வித்தியாசமான காதல் கதையை விளக்கும் புதிய சுவரொட்டியை படக்குழு வெளியிட்டுள்ளது. ரத்தமும் சதையுமான அதிரடி ஆக்ஷன் களத்தின் பின்னணியில் இதுவரை பார்த்திராத ஒரு தூய்மையான மற்றும் அழுத்தமான காதல் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. நானியின் முரட்டுத்தனமான கதாபாத்திர அமைப்பும், அதற்கு இணையான கதாநாயகியின் பாசமும் ரசிகர்களின் மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அனிருத்தின் மெலடி இசை இப்படத்தின் உணர்வுகளை மேலும் அழகாக்கியுள்ளது. செப்டம்பர் 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தைக் காண பான் இந்தியா ரசிகர்கள் தீவிர ஆவலுடன் காத்துள்ளனர். உலகெங்கும் உள்ள முக்கிய திரையரங்குகளில் இதற்கான கவுண்ட்டவுன் போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

· Prosathish

பழைய செய்திகள்