முரட்டு ஜாடலின் பாசப் பின்னணி: தாய் பாசத்தை மையமாகக் கொண்ட 'தி பாரடைஸ்' புதிய அப்டேட்!
நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் திரைக்கு வர இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், படத்தின் முக்கியமான உணர்ச்சிப்பூர்வமான அம்சம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நானி ஏற்கும் ஜாடல் என்ற முரட்டு ஆக்ஷன் கதாபாத்திரத்தின் பின்னணியில் ஆழமான தாய் பாசம் நிறைந்துள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. வெளிப்பார்வைக்கு அதிரடியாகவும் அச்சமூட்டும் வகையிலும் தோன்றும் ஜாடலின் செயல்களுக்குப் பின்னால் அவரது தாயுடனான பிரிக்க முடியாத பாசப்பிணைப்பே உந்துசக்தியாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக இந்த தாய், மகன் இடையேயான சென்டிமென்ட் காட்சிகள் பார்வையாளர்களைக் கண்கலங்க வைக்கும் என்று இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூறியுள்ளார். அனிருத்தின் ஆன்மாவைத் தொடும் பின்னணி இசையுடன் செப்டம்பர் 24 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் இப்படம் ஒரு மறக்க முடியாத உணர்வுப்பூர்வ சினிமா அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Prosathish