நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் தி பாரடைஸ்: செப்டம்பர் 24 அன்று உலகமெங்கும் ரிலீஸ்
நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்ட படமான 'தி பாரடைஸ்' (The Paradise), செப்டம்பர் 24 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் முக்கிய பாடலான 'ஜடல் ஜமானா' இன்னும் ஐந்து நாட்களில் உச்சக்கட்டத்தை எட்டவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தசரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தில் மோகன்பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. அனிருத்தின் ஆக்ரோஷமான இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமையும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
· Prosathish