நானியின் 'தி பாரடைஸ்': தமிழகத்தில் வெளியிடுகிறது திங்க் ஸ்டுடியோஸ்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான திங்க் ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தசரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கோலிவுட்டிலும் உச்சத்தில் உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் மோகன் பாபு, ராகவ் ஜூயல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் இப்படம் தயாராகியுள்ளது. தமிழ்நாடெங்கும் முன்னணி மல்டிபிளக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் இப்படம் விரிவாகத் திரையிடப்படவுள்ளது. டிக்கெட் முன்பதிவுகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்று திங்க் ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது. பான் இந்தியா ரசிகர்களிடையே இப்படத்திற்கான முன்பதிவு ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
· Prosathish