'சீன்' படத்தில் ஈஸ்வரனாக நஸ்லென்: தீபாவளிக்கு பிரம்மாண்ட வெளியீடு!

'சீன்' படத்தில் ஈஸ்வரனாக நஸ்லென்: தீபாவளிக்கு பிரம்மாண்ட வெளியீடு!

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீன்' திரைப்படத்தில் மலையாள நடிகர் நஸ்லென் நடித்துள்ள 'ஈஸ்வரன்' கதாபாத்திரத்தின் சிறப்பு முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 6 அன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மூலம் நஸ்லென் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார். அண்மையில் வெளியான இவரது மிரட்டலான கதாபாத்திரத் தோற்றம் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநில சினிமா ரசிகர்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சுஷின் ஷியாம் இசையமைப்பில் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்