சூர்யாவின் 2டி தயாரிப்பில் நஸ்லென்: சீன் பட ஈஸ்வரன் கதாப்பாத்திர அறிமுக வீடியோ

சூர்யாவின் 2டி தயாரிப்பில் நஸ்லென்: சீன் பட ஈஸ்வரன் கதாப்பாத்திர அறிமுக வீடியோ

ரோமாஞ்சம் மற்றும் ஆவேசம் திரைப்படங்கள் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் 'சீன்'. நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரேமலு புகழ் நஸ்லென் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் அவரது கதாபாத்திரமான 'ஈஸ்வரன்' குறித்த பிரத்யேக புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள வீடியோவில் நஸ்லெனின் தோற்றமும் துடிப்பான நடிப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. சுஷின் ஷியாமின் மிரட்டலான பின்னணி இசை இக்காட்சிகளுக்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்துள்ளது. மலையாளத்தில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஜித்து மாதவனும் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமும் கைகோர்த்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தீபாவளி ரேஸில் களம் காணும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்