"எனது முதல் தமிழ் படம் இது": துபாய் மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசிய இளம் நடிகர் நஸ்லென்!
'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இளம் மலையாள நடிகர் நஸ்லென், சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். துபாயில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் கலந்துகொண்ட அவர் தனது முதல் தமிழ் படம் குறித்து உருக்கமாகப் பேசினார். துபாய்க்கு பலமுறை வந்துள்ள போதிலும், தனது முதல் தமிழ்ப் படத்தின் அறிமுக விழாவிற்காக இங்கு வந்திருப்பது மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்ட நஸ்லென், இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா ஃபஹத் மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'சீன்' திரைப்படத்தை அனைவரும் பார்த்து தங்களது மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், எப்போதும் போலவே தமிழ் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தனக்குக் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்.
· @_movietamil