சூர்யாவின் 'சீன்': சைக்கோ வில்லனாக மிரட்டும் நஸ்லென்! அறிமுக வீடியோ வெளியீடு

சூர்யாவின் 'சீன்': சைக்கோ வில்லனாக மிரட்டும் நஸ்லென்! அறிமுக வீடியோ வெளியீடு

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படத்திலிருந்து இளம் நடிகர் நஸ்லெனின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இப்படத்தில் 'ஈஸ்வரன்' என்ற சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நஸ்லென் மிரட்டியிருப்பது தெரியவந்துள்ளது. சாக்லேட் பாயாகவும் ஜாலியான இளைஞனாகவும் ரசிகர்களைக் கவர்ந்த நஸ்லென், முதல்முறையாகத் தமிழ் சினிமாவில் விசித்திரமான மற்றும் கொடூரமான வில்லனாக அவதாரம் எடுத்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியான முன்னோட்ட காட்சியில் அவரது உடல்மொழியும் பார்வையும் மிரட்டலாக அமைந்துள்ளது. தீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 6 அன்று திரைக்கு வரவுள்ள 'சீன்' திரைப்படத்தில் சூர்யாவுக்கும் நஸ்லெனுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் திரையரங்கில் பெரும் விறுவிறுப்பைத் தரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

· @_movietamil

பழைய செய்திகள்