சூர்யா, ஜோதிகா வழங்கும் நஸ்லனின் 'சீன்': மிரட்டலான 'ஈஸ்வரன்' ப்ரோமோ வெளியீடு!
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் 'சீன்' (SCENE) திரைப்படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக ப்ரோமோ வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 'ஆவேஷம்' திரைப்பட புகழ் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நஸ்லன் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட படம் இதுவாகும். இப்படத்தில் நஸ்லன் ஏற்றுள்ள 'ஈஸ்வரன்' என்ற கதாபாத்திரத்தின் மாஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அட்டகாசமான ப்ரோமோ வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. சுஷின் ஷியாமின் அதிரடியான பின்னணி இசையும் நஸ்லனின் துடிப்பான திரைத் தோற்றமும் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நஸ்ரியா ஃபஹத், ஃபஹத் பாசில் ஆகியோரின் ஆதரவுடன் உருவாகும் இந்த கூட்டணி சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 'சீன்' திரைப்படம் வெளியாகவுள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட உள்ளது.
· Prosathish