சூர்யாவின் 2D தயாரிப்பில் நஸ்லென் நடிக்கும் 'சீன்': தீபாவளிக்கு நவம்பர் 6 ரிலீஸ்!

சூர்யாவின் 2D தயாரிப்பில் நஸ்லென் நடிக்கும் 'சீன்': தீபாவளிக்கு நவம்பர் 6 ரிலீஸ்!

பிரேமலு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இளம் நட்சத்திரம் நஸ்லென் நடிப்பில் உருவாகியுள்ள 'சீன்' (SCENE) திரைப்படத்தில், 'ஈஸ்வரன்' என்ற அவரது கதாபாத்திர அறிமுக போஸ்டர் மற்றும் மிரட்டலான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என பிஆர்ஓ டைமண்ட் பாபு எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். ரோமாஞ்சம், ஆவேஷம் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து நஸ்ரியா ஃபஹத் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இப்படத்தில் நஸ்லெனின் துடிப்பான மாஸ் கதாபாத்திரம் ரசிகர்களுக்குப் புதிய திரையனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடும் இந்த ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம், தீபாவளி ரேஸில் ரசிகர்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்காக அமையும் என கோலிவுட் மற்றும் மல்லுவுட் வட்டாரங்களில் உற்சாகமாகப் பேசப்பட்டு வருகிறது.

· Idiamondbabu

பழைய செய்திகள்