வெற்றிகரமாக நிறைவடைந்தது நவீன் சந்திராவின் 'NC51': படப்பிடிப்பு தளத்தில் உற்சாகக் கொண்டாட்டம்!
நடிகர் நவீன் சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கும் அவரது 51-வது திரைப்படமான 'NC51' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளனர். கடைசி நாள் படப்பிடிப்பில் கேக் வெட்டி படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் ஆர்.பி.பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஆர்பி பிலிம்ஸ் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. காளி வெங்கட், நடிகர் பாலா, ராஜா ரவீந்தர் உள்ளிட்ட பல சிறந்த கலைஞர்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினருக்கு நவீன் சந்திரா தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக டப்பிங் மற்றும் விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தொடங்கவுள்ளன. படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj