நவீன் சந்திராவின் 51-வது படம்: முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் தீவிரம்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் நவீன் சந்திரா நடிக்கும் 51-வது திரைப்படத்தின் (#NC51) ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு நிறைவு போஸ்டர்களுடன் உற்சாகமாக அறிவித்துள்ளது. இயக்குநர் ஆர்.பி. பாலா இயக்கி தயாரிக்கும் இத்திரைப்படத்தை ஆர்.பி. பிலிம்ஸ் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. கதையின் நாயகனாக நவீன் சந்திரா நடிக்க, அவருடன் காளி வெங்கட், பாலா, ராஜா ரவீந்தர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் களமிறங்கியுள்ளனர். மாறுபட்ட கதைக்களத்தில் தீவிரமான கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த கையோடு எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்புகளைத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
· Actor Kayal Devaraj