சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தில் இணைந்தார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா: ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தில் இணைந்தார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா: ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'இரு மடங்கு கம்பீரம்' என்ற தலைப்புடன் நயன்தாராவை வரவேற்று சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ஆர்.கே.எஃப்.ஐ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சந்திரமுகி, சிவாஜி, தர்பார், அண்ணாத்த திரைப்படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேட்ட பையன் சார் என்ற கம்பீரமான வாசகத்தோடு உருவாகி வரும் 'தர்மன்' படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அனிருத்தின் இசை மற்றும் அன்பறிவின் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகும் இப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

· Rkfi

பழைய செய்திகள்