வேல்ஸ் திரையரங்கில் நயன்தாராவின் பிரம்மாண்ட கட்-அவுட்: மூக்குத்தி அம்மன் 2 தீபாவளி கொண்டாட்டம்!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் பக்தி மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், வேல்ஸ் திரையரங்கில் பிரம்மாண்ட கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வீடியோ காட்சியை கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான 'வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி' வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது நயன்தாராவின் அம்மன் தோற்ற கட்-அவுட் ரசிகர்களையும் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுந்தர் சி தனது வழக்கமான நகைச்சுவை மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். குடும்பங்கள் கொண்டாடும் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 6, 2026 அன்று 'மூக்குத்தி அம்மன் 2' உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது.
· Actor Kayal Devaraj