சென்சாரில் 'யு/ஏ' சான்றிதழ் பெற்ற நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2': தீபாவளிக்கு ரிலீஸ் உறுதி!
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தணிக்கைக் குழுவால் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளதாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஷாரி கே கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் ரெஜினா கெசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் பக்தி, நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
· VelsFilmIntl