நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு வெளிநாடுகளில் பிரம்மாண்ட ரிலீஸ்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் வெளிநாடுகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாக உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தென்னிந்திய பெண் நட்சத்திரத்தின் படத்திற்கு வெளிநாடுகளில் அமையும் ஆகப் பெரிய வெளியீடாக இது இருக்கும் என சினிமா ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது முன்னணி இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார். நகைச்சுவை, பக்தி மற்றும் ஃபேன்டஸி கூறுகள் கலந்த இந்த திரைப்படம் அனைத்து தரப்பு குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் தயாராகி வருகிறது. நயன்தாராவின் தனித்துவமான திரை ஆளுமைக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இப்படத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான திரைகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
· Actor Kayal Devaraj