வெளிநாடுகளில் வரலாறு காணாத ரிலீஸ்: நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 புதிய சாதனை

வெளிநாடுகளில் வரலாறு காணாத ரிலீஸ்: நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 புதிய சாதனை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் வெளிநாடுகளில் இதுவரை ஒரு பெண் நாயகி திரைப்படத்திற்கு இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமான முறையில் திரையிடப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை ஒன்லி கோலிவுட் சினிமா தளம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் அவதரித்துள்ளார். நகைச்சுவை, சண்டை மற்றும் அதிரடி திருப்பங்கள் நிறைந்த இந்த திரைப்படத்தின் கதைகளம் வெளிநாட்டு வாழ் இந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. குடும்பங்கள் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் காட்சி அமைப்புகள் நேர்த்தியாக வந்துள்ளன. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான திரைகளில் படம் வெளியாகிறது. நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்திற்கு சர்வதேச அளவில் டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்து வருகின்றன.

· Only Kollywood

பழைய செய்திகள்