நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2': ஐந்து மொழிகளில் வெளியான அதிரடி டீசர்

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2': ஐந்து மொழிகளில் வெளியான அதிரடி டீசர்

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சுந்தர் சி இயக்கத்தில் 'மகாசக்தி மூக்குத்தி அம்மன் 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இந்த ஆன்மிக நகைச்சுவைத் திரைப்படத்தின் அதிரடி டீசர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த டீசரில் அம்மன் அவதாரத்தில் நயன்தாரா கம்பீரமாக தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் ரெஜினா கெசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் மற்றும் அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வரும் நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சுந்தர் சி பாணியிலான நகைச்சுவை மற்றும் ஆன்மிக அம்சங்கள் இணைந்து உருவாகியுள்ள இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகி வருகிறது.

· Propratheesh

பழைய செய்திகள்