ஒரே மணி நேரத்தில் 8000 டிக்கெட்டுகள்: 'மூக்குத்தி அம்மன் 2' ஞாயிறு பாக்ஸ் ஆபிஸ் வேட்டை!

ஒரே மணி நேரத்தில் 8000 டிக்கெட்டுகள்: 'மூக்குத்தி அம்மன் 2' ஞாயிறு பாக்ஸ் ஆபிஸ் வேட்டை!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் ஞாயிற்றுக்கிழமையன்று பாக்ஸ் ஆபிசில் அதிரடி புயலை கிளப்பியுள்ளது. பிரபல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளத்தில் கடந்த ஒரே மணி நேரத்தில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பக்தி, ஃபேண்டஸி மற்றும் கலகலப்பான நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்காக உருவான இப்படம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு வண்ணமயமான கொண்டாட்டத்தை வழங்கி வருகிறது. நயன்தாராவின் பிரம்மாண்டமான அம்மன் தோற்றமும், சுந்தர் சியின் நகைச்சுவை காட்சிகளும் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுத்து வருகின்றன. வார இறுதி நாளில் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் நிரம்பி வழிகின்றன. திரையரங்கு உரிமையாளர்கள் பல இடங்களில் கூடுதல் காட்சிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவெடுத்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

· Only Kollywood

பழைய செய்திகள்