நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் நயன்தாராவின் 'மகாசக்தி' டீசர்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் நயன்தாராவின் 'மகாசக்தி' டீசர்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படமான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் சிறப்பு டீசரான 'ரைஸ் ஆஃப் மகாசக்தி' நாளை செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று என்ற நிலையில், நவீன தொழில்நுட்பத்துடன் சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Propratheesh

பழைய செய்திகள்