திரையரங்குகளில் ஜெயிலர் 2 படத்துடன் வெளியாகும் 'மூக்குத்தி அம்மன் 2' டீசர்: ரசிகர்கள் குஷி!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் புதிய டீசர், திரையரங்குகளில் 'ஜெயிலர் 2' பட இடைவேளையின் போது திரையிடப்பட உள்ளதாக நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளித்திரையில் அம்மனின் பிரம்மாண்ட வருகையைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் நயன்தாரா, ரெஜினா கெசாண்ட்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு குடும்பங்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளுக்கு வரும் நிலையில், இந்த டீசர் திரையிடல் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமையும். தீபாவளி கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக வரும் நவம்பர் 6-ஆம் தேதி 'மூக்குத்தி அம்மன் 2' உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளதால், இந்த டீசரை பெரிய திரையில் காண ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj