அமெரிக்காவில் வெளியாகும் 'மூக்குத்தி அம்மன் 2': திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது ப்ரைம் மீடியா!

அமெரிக்காவில் வெளியாகும் 'மூக்குத்தி அம்மன் 2': திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது ப்ரைம் மீடியா!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் அமெரிக்கத் திரையரங்க வெளியீட்டு உரிமத்தை முன்னணி விநியோக நிறுவனமான ப்ரைம் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் போஸ்டரையும் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மேலும் பிரம்மாண்டமான பக்தி மற்றும் ஃபேண்டஸி கலந்த நகைச்சுவைக் கதைகளத்தோடு 'மூக்குத்தி அம்மன் 2 மகாசக்தி' தயாராகியுள்ளது. நயன்தாரா இதில் கம்பீரமான அம்மன் வேடத்தில் மீண்டும் தோன்றி ரசிகர்களை ஆசீர்வதிக்கத் தயாராக உள்ள நிலையில், வெளிநாட்டு ரசிகர்களும் இப்படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இப்படத்தை வெளியிடுவதற்கான திரையரங்கப் பட்டியல் மற்றும் டிக்கெட் முன்பதிவு விவரங்களை ப்ரைம் மீடியா விரைவில் வெளியிடவுள்ளது.

· Primemediaus

பழைய செய்திகள்