நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’: ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ வீடியோ நாளை காலை 11 மணிக்கு ரிலீஸ்!

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’: ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ வீடியோ நாளை காலை 11 மணிக்கு ரிலீஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் பிரத்யேக அறிமுக வீடியோவான ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் உற்சாகமாக அறிவித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ், அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆன்மீகமும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்த பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கம் என்பதால் கலகலப்புக்கும் வண்ணமயமான காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது என்பது உறுதி. தீபாவளிக்குப் பிந்தைய கொண்டாட்டமாக இப்படம் வரும் நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்