நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2: மலையாளத்தில் வெளியான வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி வீடியோ!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2: மலையாளத்தில் வெளியான வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி வீடியோ!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட ஆன்மீக திரைப்படமான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் மலையாள முன்னோட்டமான 'வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி' வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா கெசாண்ட்ரா, யோகி பாபு, சுனில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த வீடியோவில் அம்மனின் பிரம்மாண்ட தெய்வீகத் தோற்றமும் பரவசமூட்டும் பக்தி காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. நயன்தாராவின் பக்தி அவதாரம் கேரள பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கேரளாவில் பவானா ரிலீஸ் நிறுவனம் மூலம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் பிரம்மாண்டமாக திரைக்கு வரத் தயாராகி வருகிறது.

· VelsFilmIntl

பழைய செய்திகள்