நயன்தாராவின் த்ரில்லர் திரைப்படம் O2: மிரட்டலான டீசரை வெளியிட்ட படக்குழு
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள சர்வைவல் சஸ்பென்ஸ் திரைப்படமான 'O2'-வின் அதிகாரப்பூர்வ டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் ஜி.எஸ். விக்னேஷ் இயக்கியுள்ள இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி பூமிக்கடியில் புதையும் பேருந்துக்குள் தனது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மகனைக் காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டருடன் போராடும் தாயின் வேடத்தில் நயன்தாரா மிரட்டியுள்ளார். பதற்றத்தை எகிற வைக்கும் இந்த டீசருக்கு சின்க் சினிமா நிறுவனம் ஒலி வடிவமைப்பு செய்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே இந்த சர்வைவல் கான்செப்ட் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.
· Synccinema