மூக்குத்தி அம்மன் 2 ரிலீஸுக்கு முன் காளிகாம்பாள் கோவிலில் நயன்தாரா: தீவிர பிரார்த்தனை!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் வெற்றிக்காக, அவர் நாளை காலை சென்னை பாரிமுனையில் உள்ள புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை சினிமா வட்டாரப் பக்கமான மூவி தமிழ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் வேடத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவுகிறது. நயன்தாரா எப்போதுமே தனது முக்கிய படங்கள் வெளியாவதற்கு முன்போ அல்லது புதிய திட்டங்களைத் தொடங்கும் போதோ கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில் காளிகாம்பாள் அம்மனின் ஆசிபெற அவர் செல்லவிருப்பது சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 அன்று 'மூக்குத்தி அம்மன் 2' திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நயன்தாராவின் கோவில் வருகை ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.
· @_movietamil