நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா படத்தில் நஸ்ரியா: கதை கேட்டதும் உடனே ஓகே சொன்ன சுவாரசிய பின்னணி!

நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யா படத்தில் நஸ்ரியா: கதை கேட்டதும் உடனே ஓகே சொன்ன சுவாரசிய பின்னணி!

தமிழ் சினிமாவில் பலரின் மனங்களை வென்ற நடிகை நஸ்ரியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூர்யா நடிப்பில் உருவாகும் 'சீன்' (Scene) படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். நஸ்ரியாவை இப்படத்தில் நடிக்க வைத்தது குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பகிர்ந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. நேர்காணல் ஒன்றில் பேசிய ஜித்து மாதவன், நஸ்ரியா தனது ஆவேஷம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் அவரை நன்கு தெரியும் என்று கூறினார். தமிழ் சினிமாவில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் அவர் ஒப்புக்கொள்வாரா என்ற தயக்கம் இருந்ததாகவும், ஆனால் கதையைக் கேட்ட உடனேயே நஸ்ரியா சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் நஸ்ரியாவின் கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், நுண்ணிய நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பெருமிதத்துடன் கூறினார். சூர்யா மற்றும் நஸ்ரியாவுடன் பணிபுரிந்தது நண்பர்களுடன் கல்லூரி சுற்றுலா சென்றது போன்ற உற்சாகமான அனுபவத்தைத் தந்ததாகவும், அதே கலகலப்பான மனநிலை திரையிலும் எதிரொலிக்கும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நஸ்ரியாவின் வருகை தமிழ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

· @_movietamil

பழைய செய்திகள்