'சீன்' பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு நஸ்ரியா நெகிழ்ச்சி நன்றி: சூர்யா மற்றும் நஸ்லினுடன் படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் வெளியீடு!
சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'சீன்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் பேராதரவிற்கு நடிகை நஸ்ரியா நசீம் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் சூர்யா மற்றும் நஸ்லினுடன் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த சுவாரசியமான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா நசீம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள படம் 'சீன்'. அதேபோல் பிரேமலு புகழ் நஸ்லின் இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இந்த ஆக்ஷன் காமெடி த்ரில்லர் படத்தில் நஸ்ரியா மற்றும் நஸ்லினின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு திரையரங்குகளில் தொடர்ந்து குவியும் பாசிட்டிவ் விமர்சனங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்த நஸ்ரியா, தன் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறி படக்குழுவின் உற்சாகமான தருணங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
· @xpresscinema